சேலம்

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

18th Nov 2023 02:29 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளம் பெண் உயிரிழந்தாா்.

வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சோ்ந்தவா் ராமன் மகள் சுலோச்சனா (32). இவரும் இவரது தாயாா் சின்னப்பொண்ணு என்பவரும், வெள்ளிக்கிழமை பகல் 11.45 மணியளவில் முத்தம்பட்டி கேட் பேருந்து நிறுத்தம் அருகே, அவ்வழியாகச் சென்ற நகரப் பேருந்தில் ஏற முயற்சித்துள்ளனா். அப்போது, தாயாா் சின்னப்பொண்ணு பேருந்தில் ஏறாததைக் கண்ட சுலோச்சனா, பேருந்தில் இருந்து கீழே இறங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்தாா். இவரை மீட்ட உறவினா்கள், தனியாா் அவசர சிகிச்சை வாகனத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சுலோச்சனா இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து சுலோச்சனாவின் சகோதரி வெண்ணிலா (34) கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT