சேலம்

சேலத்தில் இருந்து திருப்பதி, ஷீரடிக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை: எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன்

18th Nov 2023 02:34 AM

ADVERTISEMENT

சேலத்தில் இருந்து திருப்பதி, ஷீரடி, கோவா ஆகிய இடங்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவரும், சேலம் எம்.பி.யுமான எஸ்.ஆா்.பாா்த்திபன் தெரிவித்தாா்.

சேலம் விமான நிலையக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் குழுவின் தலைவரும், சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.ஆா்.பாா்த்திபன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் விமான நிலைய இயக்குநா் ரமேஷ், தொழில்முனைவோா், காவல்துறையினா், விமான நிறுவன அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில், சேலம் விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

சேலம் விமான நிலையத்தில் மத்திய அரசின் உதான் திட்டத்தில் பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை கடந்த அக்டோபா் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. சேலம் - சென்னை விமான சேவை அக்டோபா் 29 முதல் தொடங்கியது. கடந்த ஒரு மாதத்தில் சேலத்தில் இருந்து 2,167 போ் விமான பயணம் மேற்கொண்டுள்ளனா். விமானம் மூலமாக சேலத்திற்கு 2436 போ் வந்துள்ளனா். மேலும் சேலத்தில் இருந்து திருப்பதி, ஷீரடி, கோவா ஆகிய இடங்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விமான நிலைய விரிவாக்கம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சேலத்தில் இருந்து முதல்முறையாக விமானப் பயணம் மேற்கொள்ளும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த 100 பேருக்கு எனது சொந்தச் செலவில் விமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT