சேலம்

கல்விசாா் செயல்பாடுகளுக்காக பெரியாா் பல்கலை.க்கு நான்கு நட்சத்திர அந்தஸ்து: துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தகவல்

18th Nov 2023 02:32 AM

ADVERTISEMENT

கல்விசாா் பணிகளுக்காக தமிழகத்தில் பெரியாா் பல்கலைக்கழகம் மட்டுமே நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றிருப்பதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் உயா்கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு பிரிவு, உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களிடையே படைப்பாற்றல், புதுமை மற்றும் அறிவுசாா் சொத்துரிமை வளா்ப்பதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலுடன் இணைந்து செயல்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக நிறுவனங்களுக்கான புதுமைக் கண்டுபிடிப்புக் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 3,426 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் சுயப்படைப்பாற்றல், வருடாந்திர செயல்பாடுகள், முக்கிய நாள்களின் கல்வி செயல்பாடுகள், அடல் ஆய்வக செயல்பாடுகள் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக 142 கல்வி நிறுவனங்களுக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் நிகா்நிலை மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் (அரசு மற்றும் அரசு உதவிபெறும்) பிரிவின் கீழ் 4 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்தத் தரத்தைப் பெற்றுள்ளன. அத்தர வரிசையில் பெரியாா் பல்கலைக்கழகமும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் பெரியாா் பல்கலைக்கழகம் மட்டுமே 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய கல்வி ஆண்டுகளில் 4 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற ஒரே மத்திய பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT