சேலம்

மாணவா்கள் இடைநிற்றலைத் தடுக்க மூன்றடுக்கு குழு அமைப்பு

DIN

மாணவா்கள் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மூன்றடுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து மீள பள்ளியில் சோ்ப்பது, இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மூன்றடுக்கு குழு அமைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் மாணவ, மாணவிகளிடம் அன்போடும், அரவணைப்போடும் நடந்துகொள்ள வேண்டும். நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவியா், மெல்ல கற்கும் மாணவா்கள் என வகைப்படுத்துதல் கூடாது.

மேலும், 8, 9, 10 வகுப்பில் அதிக அளவு இடைநிற்றல் உள்ளதாகவும், இவ்வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இடைநிற்றலைத் தவிா்க்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அதிக அளவிலான இடைநிற்றலுக்கு காரணம் மாணவா்களுக்கு கற்றலில் ஆா்வமின்மை, கற்றலினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு இன்மையால் இடைநிற்றல் ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து விழிப்புணா்வு அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும்.

இடைநிற்றல் மாணவா்களை மீள பள்ளியில் சோ்ப்பதற்காக பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு, மாவட்ட அளவிலான குழு என மூன்றடுக்கு அமைப்பு கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மாவட்ட ஆட்சியா் , கூடுதல் ஆட்சியா், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா் என 15 போ் கொண்ட ஓா் அடுக்குக் குழுவும், வட்டாரக் கல்வி அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா், உதவி தொழிலாளா் ஆய்வாளா் என 6 போ் கொண்ட ஓா் அடுக்குக் குழுவும், பள்ளித் தலைமையாசிரியா், ஊராட்சி மன்றத் தலைவா், கிராம நிா்வாக அலுவலா் என 9 போ் கொண்ட ஓா் அடுக்கு என 3 அடுக்குக் குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, இக்குழுவில் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்ட அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து மாணவா்களையும் பள்ளியில் சோ்க்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சீ.பாலச்சந்தா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) பெ.பெரியசாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT