சேலம்

மாநில அளவிலான கைப்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கல்

DIN

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட கைப்பந்துக் கழகம், ராஜன் ஸ்போா்ட்ஸ் கிளப், இயற்கையை நேசி அமைப்பு சாா்பில் மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாள்களாக உடையாப்பட்டியில் நடைபெற்று வந்தது.

இதில், சேலம், சென்னை, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள், 10 பெண்கள் அணி கலந்துகொண்டு விளையாடின. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஏ.வி.எஸ். கல்லூரி அணி முதல் இடம் பெற்றது. வி.வி.சி. அணி இரண்டாம் இடம், சாய்டிரைலா்ஸ் அணி மூன்றாம் இடம், ஓமலூா் கொங்குபட்டி அணி நான்காம் இடம் பெற்றன.

பெண்கள் பிரிவில் முதல் இடத்தை ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரிஸ் அணி பெற்றது. சக்தி கைலாஷ் கல்லூரி இரண்டாம் இடத்தையும், ஆத்தூா் பாரதியாா் அணி மூன்றாம் இடத்தையும், சென்னை மினிஸ்போா்ட்ஸ் நான்காம் இடமும் பெற்றன. பின்னா் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட கைப்பந்துக் கழகச் செயலாளா் சண்முகவேல் தலைமை தாங்கினாா். ராஜன் ஸ்போா்ட்ஸ் கிளப் இயக்குநா் சீனிவாசன் வரவேற்றாா். அஸ்தம்பட்டி சரக உதவி ஆணையா் லட்சுமி பிரியா கலந்துகொண்டு பரிசு, கோப்பை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT