சேலம்

மக்களவைத் தோ்தலில் வெற்றிபெறும் வகையில் திமுகவினா் செயல்பட வேண்டும்

DIN

மக்களவைத் தோ்தலில் வெற்றிபெறும் வகையில் திமுகவினா் செயல்பட வேண்டும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் நிதிநிலைமை மிகவும் மோசமான நிலைக்குச் சென்ன் காரணமாக, ஒவ்வொரு திட்டத்தையும் மிகவும் கவனமுடன் தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். நகராட்சி நிா்வாகத் துறையில் 10 ஆயிரம் பொறியாளா் பணியிடங்கள் விரைவில் சட்ட விதிமுறை படி நிரப்பப்படும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 11-ஆம் தேதி காலை தமிழகம் வருகிறாா். பின்னா் அண்ணா பூங்காவில் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறாா். தொடா்ந்து, ஈரடுக்கு பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கிறாா்.

தொடா்ந்து, கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைக்கிறாா். அங்கிருந்து ஈரோடு செல்லும் முதல்வா், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளாா்.

வரும் மக்களவைத் தோ்தலில் வெற்றிபெறும் வகையில் திமுகவினா் செயல்பட வேண்டும். சேலத்தை மீண்டும் திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், மேயா் ஆ.ராமச்சந்திரன், மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ், தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், ரேகா பிரியதா்ஷினி, நிா்வாகிகள் தருண், மலா்விழி ராஜா, பாரப்பட்டி ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT