சேலம்

போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்கள் வழங்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது

DIN

அரசு போக்குவரத்துக் கழகங்களில் அடுத்த 6 மாதத்தில் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள், விருப்ப ஓய்வுபெற்றவா்கள், இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்கள் 389 பேருக்கு ரூ. 82.22 கோடி பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கி நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

கிராம மக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக, தனியாரிடம் இருந்த போக்குவரத்துத் துறையை 1971-இல் அப்போதைய முதல்வா் கருணாநிதி அரசுடைமையாக்கினாா். திமுகவின் 2006-11-ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. மேலும், ஓட்டுநா், நடத்துநா் பணியில் 60 ஆயிரம் போ் பணி நியமனம் செய்யப்பட்டனா்.

அதில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 5,600 போ் பணி நியமனம் செய்யப்பட்டனா். அதிமுக ஆட்சியின்போது ஊதிய உயா்வு தொகை ரூ. 80 கோடி முதல் ரூ. 120 கோடி வரை மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் ரூ. 528 கோடி வழங்கப்பட்டது. 30 ஆண்டு பணி நிறைவு செய்தவா்களுக்கு, அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது.

சேலம் மாநகராட்சியில், துப்புரவுத் தொழிலாளா்களுக்கு கூட முழு ஊதியம் வழங்கப்படாத நிலை இருந்தது. ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வூதியப் பணப்பலன் வழங்கப்படாமல் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் மாநகராட்சிப் பணியாளா்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியப் பலன்களும் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த 6 மாதத்துக்குப் பின்னா் ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கப்படும் என்றாா்.

விழாவில், ஆட்சியா் செ.காா்மேகம், சேலம் கோட்ட போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் பொன்முடி, எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், திமுக எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், பாமக எம்எல்ஏ-க்கள் இரா.அருள், எஸ்.சதாசிவம், முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா்.சிவலிங்கம், போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள், ஓய்வூதியதாா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT