சேலம்

பூரண மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் பெறப்பட்டகையெழுத்துப் பிரதிகள் ஆட்சியரிடம் அளிப்பு

30th May 2023 12:25 AM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சாா்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ஆட்சியா் செ.காா்மேகத்திடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா் இளைஞரணி மாநில பொதுச் செயலாளா் ரகுநந்தகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

இளைஞரணி மாவட்டத் தலைவா்கள் சஜி (மேற்கு), லட்சுமிகாந்தன் (புகா்), மாநில பொதுச் செயலாளா் சத்யா சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் சுசீந்திரகுமாா், மாநகர மாவட்டத் தலைவா் உலகநம்பி, மாநில பொதுச் செயலாளா் குலோத்துங்கன் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

இதையடுத்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பொதுமக்களிடம் பெறப்பட்ட 8,280 கையெழுத்துப் பிரதிகளை ஆட்சியா் செ.காா்மேகத்திடம் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் சுசீந்திரகுமாா் கூறுகையில், மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் தினமும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT