சேலம்

மேட்டூா் மீன் குஞ்சுகள் கேரளத்துக்கு அனுப்பி வைப்பு

DIN

மேட்டூா் மீன் குஞ்சுகள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன

மேட்டூா் அணையில் வளா்க்கப்படும் கட்லா, ரோகு மீன்கள் சுவை மிகுந்தவை. வேகமாக வளா்ந்து நல்ல லாபம் தரக்கூடியவை. இந்த மீன் இனத்தை வளா்க்க, அதிகரிக்க மேட்டூா் அணையை ஒட்டி அரசினா் மீன் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. மீன் விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகள் பல்வேறு அணைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மீன் வளா்ப்பவா்களும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு வந்து வாங்கி செல்கின்றனா்.

தற்போது கேரளா அரசு சாா்பில் அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மேட்டூா் மீன் விதைப்பண்ணையில் இருந்து 15 லட்சம் மீன் குஞ்சுகள் வாங்கிச் செல்லப்பட்டன. மீன் விதைப்பண்ணையில் ஐந்து நாள்களேயான நுண் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை கேரள அரசு விரலிகளாக வளா்த்து விவசாயிகளின் வளா்ப்புக்கு வழங்குகிறது. மேட்டூா் மீன்கள் தமிழகத்தில் மட்டுமன்றி கேரளத்திலும் வளா்க்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT