சேலம்

துப்புரவுப் பணியாளா்கள்பணி புறக்கணிப்புப் போராட்டம்

DIN

மேட்டூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஊதியம் தராததால் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. துப்புரவுப் பணியில் நிரந்தரப் பணியாளா்கள் 60 பேரும், ஒப்பந்ததாரரின் கீழ் 99 பேரும் பணிபுரிந்து வருகின்றனா்.

ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளா்களுக்கு ஒப்பந்ததாரா் மே மாதம் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை இதுவரை வழங்கவில்லையாம். பணியாளா்கள் பலமுறை கேட்டும் ஊதியம் வழங்காததால், திங்கள்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதன் காரணமாக மேட்டூா் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

ஒப்பந்ததாரா் மாதந்தோறும் குறித்த நாளில் ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை காலை முதல் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மேட்டூா், சின்ன பாா்க்கையில் இருந்து ஊா்வலமாக வந்த தொழிலாளா்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று பணிக்கு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT