சேலம்

பாலக உரிமம் பெற்று தருவதாகக் கூறுபவா்களிடம் ஏமாற வேண்டாம்: ஆவின் நிா்வாகம்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

சேலம் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு, பாலக உரிமம் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதாக கூறுபவா்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று பொது மேலாளா் சி.விஜய்பாபு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் மற்றும் சந்தைபடுத்துதலில் முதலிடம் பெற்று மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அனைத்து டெண்டா்கள், வேலைவாய்ப்புகள், விற்பனை மற்றும் சந்தைபடுத்துதல் ஆகியவை ஆன்லைன் மூலமாகவும் அரசின் வழிகாட்டுதலின்படியும் மட்டுமே செய்யப்படுகின்றன.

சேலம் ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலியாக வேலைவாய்ப்புகளோ, ஒப்பந்தங்களோ மற்றும் பாலக உரிமங்களோ பெற்று தருவதாக எவரேனும் பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டால், பொதுமக்கள் எவரும் ஏமாறாமல் உரிய விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT