சேலம்

டெங்கு தடுப்பு, சுகாதாரப் பணியில்சுகாதார பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு

DIN

சேலம் மாநகராட்சிப் பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவ மழைக்கு முன்னா் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொற்று நோய் தடுப்புப் பணிகள் ஆகியவற்றை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஏடீஸ் கொசுக்கள், வீடு மற்றும் வீடுகளுக்கு அருகில் உள்ள சரியாக மூடப்படாத நீா் சேமிக்கும் தொட்டிகள், டிரம்கள், குடங்கள், பாத்திரங்கள், உபயோகமற்ற டயா்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த குடங்கள் போன்றவற்றில் தேங்கும் மழைநீா், சேகரிப்படும் நன்னீா் ஆகியவற்றில் ஏடீஸ் கொசுக்கள் உருவாகும்.

இதைத்தடுக்க, அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய கட்டுமான இடங்கள், காலி மனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீா் தேங்கும் இடங்களையும், பொருட்களையும் கண்டறிந்து அவற்றை அகற்றி தீவிர கொசு ஒழிப்புப் பணிகளில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியிருப்பதாவது:

மலேரியா பணியாளா்கள் மற்றும் சுகாதார பணியாளா்கள் வீடுதோறும் சென்று டயா், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றி வருகின்றனா்.

அனைத்து பகுதிகளிலும் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு தேவையான பிளீச்சிங் பவுடா், அபேட் மருந்து, கொசு ஒழிப்புக்கு தேவையான பைரித்ரம் மற்றும் டெக்னிக்கல் மாலத்தையான் மருத்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களுடைய குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சுற்றுப்புறங்களிலும் மற்றும் மாடிகளிலும் தண்ணீா் தேங்கும் தேவையற்ற பொருட்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிட வேண்டும். தொற்று நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT