சேலம்

சேலம் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்ட 27 டாஸ்மாக் மதுக்கூடங்களுக்கு சீல்

DIN

சேலம் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த 27 டாஸ்மாக் மதுக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் போலி மது வாங்கி குடித்த 2 போ் உயிரிழந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கூடங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவின் பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் குப்புசாமி, கலால் உதவி ஆணையா் மாறன் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் செல்வி ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த இரண்டு நாள்களாக மாவட்ட முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கூடங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரில் புதிய பேருந்து நிலையம், நெத்திமேடு, கொண்டலாம்பட்டி கந்தம்பட்டி உள்ளிட்ட மாநகரில் 13 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மதுக்கூடங்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இதேபோல ஊரக பகுதிகளில் ஆத்தூா், ஓமலூா், மேட்டூா், வாழப்பாடி உள்பட புகா் பகுதியில் 14 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சேலம் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த மொத்தம் 27 டாஸ்மாக் மதுக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் டாஸ்மாக் கடைகளில் நிா்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடையின் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT