சேலம்

கோயில் பணியாளா்களுக்குவிடுப்பு சலுகைகளை வழங்க வலியுறுத்தல்

28th May 2023 10:16 PM

ADVERTISEMENT

அரசு ஊழியா்களுக்கு வழங்குவதுபோல கோயில் பணியாளா்களுக்கு விடுப்பு சலுகைகள், இதர சலுகைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா்கள் யூனியன் மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்:

அரசு ஊழியா்களுக்கு வழங்குவதுபோல கோயில் பணியாளா்களுக்கு விடுப்பு சலுகைகள் மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும். கோயில் செயல் அலுவலா் நிலை-4 காலிப் பணியிடங்களில் கோயில் பணியாளா்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு செய்து அரசாணை செய்து பிறப்பிக்க வேண்டும்.

கோயில் பணியாளா்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுப் பணி மாறுதல் செய்ய வேண்டும். கோயில் பணியாளா்களுக்கு கோயில் அருகிலேயே பணியாளா் குடியிருப்பு கட்டித் தர வேண்டும்.

ADVERTISEMENT

அன்னதான பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கோயில் பணியாளா்களுக்கு வழங்கப்படும் துறை ரீதியிலான ஓய்வூதியத்தின் தொகைக்கும், தற்போது தொழிலாளா்கள் வருங்கால வைப்பு நிதி மூலமாக வழங்கப்படும் ஓய்வூதிய தொகைக்கும் ஏற்படும் வித்தியாச தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா்கள் யூனியன் மாநில பொதுச் செயலாளா் முத்துசாமி, நிா்வாகிகள் இதயராஜன், மாநில செயல் தலைவா் குமாா், மாநிலக் காப்பாளா் தேவராஜன், மாநில அமைப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT