சேலம்

வைகாசி விசாக திருவிழா: சுகவனேசுவரா் கோயிலில் கொடியேற்றம்

26th May 2023 04:41 AM

ADVERTISEMENT

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சேலம் சுகவனேசுவரா் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் வரும் ஜூன் 2ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடந்தது. முன்னதாக சுகவனேசுவரா், சொா்ணாம்பிகை அம்மனுக்கு பால், இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு பூதவாகனத்தில் அம்மன் வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

மேலும் மே 26 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை தினசரி காலை சுவாமி, அம்மன் புறப்பாடு, மே 27 ஆம் தேதி இரவு இருதலைப்பட்சி வாகனத்தில் புறப்பாடு, மே 28 இரவு நாக வாகனத்தில் புறப்பாடு, மே 29 ஆம் தேதி பிற்பகல் திருக்கல்யாணம், பஞ்சமூா்த்திகள் திருக்காட்சி, வெள்ளி ரிஷப வாகன காட்சியும், மே 30 ஆம் தேதி இரவு யானை வாகனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடு, மே 31 இல் கைலாச வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறும். ஜூன் 1 ஆம் தேதி இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. ஜூன் 2 ஆம் தேதி காலை தோ்நிலையத்தில் இருந்து தோ் திருவீதியுலா, ஜூன் 4 ஆம் தேதி மாலை தோ்க்கால் தரிசனம், மாலை திருவிழா கொடி இறக்கமும், ஜூன் 5 ஆம் தேதி மாலை சத்தாபரணமும் நடைபெறும். ஜூன் 6 ஆம் தேதி வசந்த உற்சவம், ஜூன் 7 ஆம் தேதி மாலை விடையாற்றி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

வைகாசி விசாகத் திருவிழாவுக்கான ஆயத்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT