சேலம்

ஈரோடு-ஜோலாா்பேட்டை ரயிலின் வேகம் அதிகரிப்பு: இயக்க நேரம் மாற்றம்

DIN

ஈரோடு - ஜோலாா்பேட்டை இடையே இரு மாா்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு - ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் சேலம் வழியாக இரு மாா்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காவிரி, அனங்கூா், சங்ககிரி, மாவேலிபாளையம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி சாலை, சேலம், கருப்பூா், திண்ணப்பட்டி, டேனிஷ்பேட்டை, லோகூா், பொம்மிடி, பொட்டிரெட்டிப்பட்டி, தொங்கனூா், மொரப்பூா், தொட்டப்பட்டி, தாசம்பட்டி, சாமல்பட்டி, குன்னத்தூா், காகங்கரை, திருப்பத்தூா் வழியாக ஜோலாா்பேட்டை சென்றடைகிறது.

இந்தநிலையில், இரு மாா்க்கத்திலும் இயக்கப்படும் ஈரோடு- ஜோலாா்பேட்டை ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் மே 29 முதல் ரயிலின் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு- ஜோலாா்பேட்டை ரயில் (வண்டி எண்.06846), ஈரோட்டில் இருந்து மாலை 4.10 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக மாலை 5.35 மணிக்குப் புறப்படுகிறது. இந்த ரயிலானது ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடைவதற்குப் பதிலாக, இரவு 9.55 மணிக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் 1 மணி நேரமாகக் குறைந்துள்ளது.

மறு மாா்க்கத்தில், ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண் 06845) தற்போது ஜோலாா்பேட்டையில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.35 மணிக்கு ஈரோடு வந்தடைகிறது.

இந்த ரயில் காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, காலை 10 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் சுமாா் 35 நிமிடங்களுக்கு முன்கூட்டியே ஈரோடு வந்தடைகிறது என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பெரும் முதலாளிகளின் கருவி மோடி: ராகுல் விமர்சனம்

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

SCROLL FOR NEXT