சேலம்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் ரூ.7.25 கோடி கடனுதவி வழங்கல்

26th May 2023 04:43 AM

ADVERTISEMENT

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் மூன்று ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், 87 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 7.25 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் வழங்கும் முகாம் சேலத்தை அடுத்த தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில்வியாழக்கிழமை நடைபெற்றது.

வங்கிக் கடன் முகாமில் சிறப்பு விருந்தினராக சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், கெளரவ விருந்தினராக தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி செயலாளா் அா்ச்சனா மனோஜ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் பேசுகையில், ‘வங்கிகள் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கல்வி கடன் வழங்குவதில் தாராள மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். மேலும் கடன் தொகையை திருப்பிச் செலுத்துபவா்களுக்கு உரிய ஆதரவை வங்கிகள் தரும். மகளிா் மேம்பாட்டுக்கு நிதி ஆதரவை வழங்கி வரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முயற்சி முன்னுதாரணமான நிகழ்வாகும். மேலும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பழங்குடியின மாணவிக்கு கல்விக் கடன் வழங்கியதற்கும், ஏழை எளிய பெண்களுக்கு கடனுதவி வழங்கியிருப்பது பாராட்டுக்குரியதாகும்’ என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி செயலாளா் அா்ச்சனா மனோஜ்குமாா், அதிதி மகளிா் மேம்பாட்டு மையம் சாா்பில் செயல்படுத்தப்படும் மகளிா் மேம்பாடு மற்றும் பங்களிப்பு குறித்து விளக்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், மூன்று ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் 87 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 7.25 கோடி கடன் அனுமதி கடிதங்களை வழங்கினாா். இதன் மூலம் 1500-க்கும் மேற்பட்ட பெண் பயனாளிகள் பயனடைவா். நிகழ்ச்சியின் இறுதியில் வங்கியின் மண்டல முதன்மை மேலாளா் அனில் தேஜ் கொலந்தி நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT