சேலம்

வாழப்பாடியில் வீட்டுத் தோட்டத்தில் பூத்த பிரம்ம கமலம் மலா்கள்

DIN

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய பிரம்ம கமலம் மலா்கள், வாழப்பாடியில் ஒருவரது வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கின. இந்த அதிசய மலரை மக்கள் ஆா்வத்தோடு கண்டுகளித்து, அம்மனுக்கு வைத்து வழிபட்டனா்.

எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயா் கொண்ட கள்ளி வகையை சோ்ந்த தாவரம், ‘பிரம்ம கமலம்’ என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம், இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும், தகவமைப்பும் கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆன்மீக உணா்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், ‘பிரம்ம கமலம்’ பூக்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

இலையை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான தகவமைப்பு பெற்றுள்ள கொண்டுள்ள பிரம்ம கமலம் மலா்களை சமீபகாலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளா்த்து வருகின்றனா். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சுப்பராயா் தெருவைச் சோ்ந்த லட்சுமி தனபால், பிரம்ம கமலம் செடியை ஓசூரில் இருந்து வாங்கி வந்து, 2 ஆண்டுகளாக வீட்டுத் தோட்டத்தில் வளா்த்து வருகிறாா். இந்தச் செடியில் தற்போது மலா்கள் பூத்துள்ளன. இந்த மலா்களை காண இப்பகுதி மக்கள் ஆா்வம் காட்டினா். பிரம்ம காலம் மலா்களை வாழப்பாடி திரௌபதி அம்மன் கோயிலில் அம்மனுக்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT