சேலம்

ஏற்காடு கோடை விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

19th May 2023 12:13 PM

ADVERTISEMENT


சேலம்: ஏற்காடு கோடை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கியபடி, சுற்றுலா பயணிகளை வரவேற்கக் காத்திருக்கிறது.

 ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா வருகின்ற 21ஆம் தேதி தொடங்குகிறது. 28ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெறும் இந்தக் கோடை விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்படு செய்யப்பட்டுள்ளது

தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, மாவட்ட நிர்வாகம் என பல்வேறு துறைச் சார்ந்த அதிகாரிகள் கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

ஏற்காட்டில் முக்கிய அம்சமாக விளங்கும் அண்ணா பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. பயணிகளை காவரும் வகையில் மலர்கள் அழகாக வைக்கப்பட்டு தற்போது தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

பல்வேறு வகையான வரலாற்று சின்னங்களும் குழந்தைகளை மகிழ்விக்க கூடிய அம்சங்களும் அலங்கரிக்கப்பட உள்ளன.

ஏற்காடு முழுவதும் தற்போது தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மான் பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் எங்கு பார்த்தாலும் சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு சுற்றுலாப் பணிகளை கவர்வதற்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பூங்கா சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் இரவு பகலாக வரையப்பட்டு வருகிறது. 

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பணிகள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில் மூன்று நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் நடைபெறும் கொடை விழா தற்போது எட்டு நாட்கள் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் எந்தவித அவசரமும் இன்றி ஏற்காட்டின் அழகை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கோடை விடுமுறை முடியும் தருவாயில் இந்த கோடை விழா முன்னதாகவே தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT