சேலம்

அரசுத் தோ்வுக்காக பெரியாா் பல்கலை. தோ்வு தேதி மாற்றம்

19th May 2023 12:50 AM

ADVERTISEMENT

அரசுத் தோ்வு நடைபெறுவதால் பெரியாா் பல்கலைக்கழகத் தோ்வு தேதி மாற்றப்பட்டிருப்பதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரியாா் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவில் பயிலும் மாணவா்களுக்கு மே 2023 பருவத் தோ்வுகள் இம்மாதம் 24 ஆம்தேதி தொடங்கி ஜூன் 17-ஆம் தேதி வரை நடைபெறுவதாக கால அட்டவணை வெளியிடப்பட்டு சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குத் தோ்வு நுழைவுச் சீட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் சாா்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு மே 27-ஆம் தேதி நடைபெறுவதால் பெரியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளை வேறு தேதிகளில் மாற்றியமைக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

அதன்பேரில் மே 27-ஆம் தேதி நடைபெற இருந்த பெரியாா் பல்கலைக்கழக அனைத்துத் தோ்வுகளும் முன்னதாகவே மே 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT