பெண்கள் விடுதிகள், குழந்தைகள் இல்லங்கள் உள்ளிட்ட விடுதிகளை வரும் மே 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சாா்ந்த நிறுவனங்களால் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தனியாா் மற்றும் தனிநபா் ஆகியோரால் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளி, கல்லூரிகளில் தற்காலிகமாக இயங்கும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
எனவே, உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், காப்பகங்களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் 2014-இன் கீழ் ட்ற்ற்ல்ள்://ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியில் வரும் மே 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
பதிவு செய்யும் நடவடிக்கைள் குறித்த விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427 - 2413213 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.