வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய பாமக செயலாளா் பாஸ்கா் தலைமையில் பாமகவினா் முதல்வருக்கு 1,000க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனா்.
பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விடுத்த அறிவுறுத்தலின்படி மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதூா் கிராமம், சுண்ட மேட்டூா் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாமகவினா் முதல்வருக்கும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை தலைவருக்கும் 1,000-க்கும மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனா்.
இதில் மாவட்ட இளைஞா் சங்கத் தலைவா் மாதேஷ் , மாவட்ட ஊடக பேரவை தலைவா் மோகன், ஒன்றியத் தலைவா் ராஜசேகா், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.