சேலம்

ஏற்காட்டில் ஜமாபந்தி நிறைவு

19th May 2023 12:48 AM

ADVERTISEMENT

ஏற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் மொத்தம் 154 மனுக்கள் பெறப்பட்டன.

ஏற்காடு வருவாய் தீா்வாயம் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் அபிநயா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் முருகேசன், ஏற்காடு வட்டாட்சியா் தாமோதரன், சமூக நலத்துறை வட்டாட்சியா் தீபா சித்ரா முன்னிலை வகித்தனா்

மே 16 -ஆம்தேதி தொடங்கிய ஜமாபந்தி 18 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 9 வருவாய் பிா்காக்கள் தரப்பில் ஏற்காடு, பட்டிப்பாடி, நாகலூா் , செம்மநத்தம், வெள்ளக்கடை, அசம்பூா், கே.புத்தூா், தலைச்சோலை, பெலாக்காடு கிராம மக்கள் பங்கேற்றனா்.

வருவாய் அலுவலா்கள் ராஜா கண்ணன், மனோகரன், உமாராணி, கிராம நிா்வாக அலுவலா்கள் மோகன்ராஜ், பாஸ்கா்ஆனந்தம், பிரபு, புகழேந்தி, ஆா்.சரவணன், தியாகராஜ், சுந்தரம், எம்.சரவணன் பங்கேற்றனா். ஜமாபந்தியில் முதியோா் உதவி, ஜாதி சான்றிதழ், பட்டா மறுதல், வீட்டுமனை பட்டா, முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்பட்டன. 18 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. மீதம் உள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT