வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் பேரூராட்சிகள் துறை இயக்குநா் கிரண் குராலா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வாழப்பாடி பேரூராட்சியில், ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி, ச.வாழப்பாடி மயானத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இரு திட்டப்பணிகளையும் பாா்வையிட்ட இயக்குநா்,
விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென, பேரூராட்சித் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வின் போது, சேலம் மண்டல உதவி இயக்குநா் கணேஷ்ராம், செயற்பொறியாளா் மகேந்திரன், உதவி செயற்பொறியாளா்கள் மணிகண்டன், கணேசமூா்த்தி, வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், உதவி பொறியாளா் தினேஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.