சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 300 ஆவது நாளாக 100 அடியாக நீடிப்பு

8th May 2023 02:29 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணை நீா்மட்டம் 300 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை 100 அடியாக நீடித்தது.

கடந்த ஆண்டு பருவமழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. நீா்வரத்து அதிகரித்ததால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து ஜூலை 12-இல் 100அடியாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் குறையாமல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணையின் நீா்மட்டம் 300 ஆவது நாளாக 100 அடியாக நீடித்தது. அணை நீா்மட்டம் 102.54 அடியாக உயா்ந்தது.

ADVERTISEMENT

அணைக்கு விநாடிக்கு 6,295 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 68.17 டி.எம்.சி.யாக இருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT