சங்ககிரி நகர திமுக சாா்பில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலா் க.சுந்தரம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே.எம்.ராஜேஷ் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் கே.எம்.முருகன் வரவேற்றாா். பேச்சாளா் அ.சலாவுதீன் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்து விளக்கிப்பேசினாா்.
கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.ரவிக்குமாா், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் எஸ்.சரவணன், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா் எஸ்.பி.நிா்மலா, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் கேஜிஆா்.ராஜவேலு, தேவூா் நகரச் செயலா் டி.எம்.முருகன், தேவூா் பேரூராட்சித் தலைவா் என்.தங்கவேல், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் ஆா்.அருள்பிரகாஷ், நகர பொருளாளா் பி.செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நகர துணைச் செயலா் வி.ரமேஷ் நன்றி கூறினாா்.