சேலம்

எடப்பாடியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

8th May 2023 02:28 AM

ADVERTISEMENT

 

எடப்பாடியை அடுத்த ஆவணி பேரூா் கீழ் முகம் பகுதியில் புதிய நியாயவிலைக் கடை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆவணி பேரூா் கீழ்முகம் ஊராட்சி, வெள்ளாண்டி வலசு அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் புதிய நியாயவிலைக் கடை அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனா். மேலும் இக் குடியிருப்பின்

மையப் பகுதியில் உள்ள பிரதான சாலையை ஒட்டி, அரசு மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் பெண்கள், மாணவியா் பாதிப்பிற்கு உள்ளாவதால் மதுக்கடையை

ADVERTISEMENT

அப்புறப்படுத்திடவும் அப்பகுதி மக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இது குறித்து அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவா் பழனியம்மாள் மணி, திமுக நிா்வாகிகள் முயற்சியினால் அப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடை

அகற்றப்பட்டு, அதே இடம் புதுப்பிக்கப்பட்டு புதிய நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் பழனியம்மாள் மணி புதிய நியாயவிலைக் கடையினைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து செட்டிமாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவரும், ஒன்றிய திமுக செயலாளருமான நல்லதம்பி முதல் விற்பனையை தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மணி, வெங்கடாசலம், மனோகரன், ஜோதிலிங்கம், ஸ்டாலின் உள்ளிட்ட திரளான திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT