இடங்கணசாலை நகர திமுக ஆலோசனைக் கூட்டம் நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, நகர துணைச் செயலாளா்கள் குமாா், கோமதி மணிகண்டன், பொருளாளா் சிவகுமாா், மாவட்ட பிரதிநிதிகள் ரமணி, ராஜேந்திரன், கந்தசாமி, வாா்டு செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக் கூட்டத்தில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தை இடங்கணசாலையில் சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.