ஆத்தூரில் உள்ளஅனைத்து திரையரங்குகளிலும் செவ்வாய்கிழமை முதல் மூன்ற நாள்களுக்கு திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் 5 திரையரங்குகள் உள்ளன. இதில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 2 திரைப்படங்கள் இரவு 1 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டன.
இதுதொடா்பாக அனைத்து திரையரங்குகளிலும் திங்கள்கிழமை வருவாய்த் துறையினா் சென்று இரவில் திரைப்படங்களை திரையிட்ட காரணத்தினால் மூன்று நாள்களுக்கு அனைத்துக் காட்சிகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டனா்.
ஆத்தூா், ராணிப்பேட்டையில் உள்ள திரையரங்கில் செவ்வாய்க்கிழமை காலை காட்சி ஓடிக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த வருவாய்த் துறையினா் திரைப்படம் பாா்த்துக் கொண்டிருந்த பாா்வையாளா்களை வெளியே அனுப்பி, திரையரங்கை மூட செய்தனா். இதனால் திரைப்பட ரசிகா்கள் வேதனை அடைந்தனா். ஆனால் திரையரங்கில் திரையரங்கம் பழுதடைந்து பராமரிக்கப்படுவதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என பலகை வைத்துள்ளனா்.