ஆத்தூா், விநாயகபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கோயில் நிா்வாகி பெருமாள் யானை மீது அமா்ந்து அம்மனை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து பக்தா்கள் பக்தா்கள் தீச்சட்டி எடுத்து, அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.