கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் லாரி டியூப்களில் சாராயம் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி மீனவா் தெரு, கடம்பூா் சாலையில் வசிப்பவா் சேகா். இவரின் மகன் சுபாஷ் (43). இவா் கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடியில் லாரி டியூப்களில் 110 லிட்டா் சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்தாா்.
கெங்கவல்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையின்போது அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.