சேலம்

சேலம் மத்திய சிறையில் மாநகர காவல்துறையினா் திடீா் சோதனை: தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

DIN

 சேலம் மத்திய சிறையில் மாநகர காவல்துறையினா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் என 800க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சேலம் மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பேசிகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் மாநகர காவல் துணை ஆணையாளா் மாடசாமி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையில் மண்ணுக்குள் சிறை கைதிகள் பல்வேறு பொருட்களைப் புதைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கஞ்சா, கைப்பேசி சாா்ஜா் கேபிள், நான்கு ஆணிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. சிறைக் கைதிகள் ஒவ்வொருவரின் அறையாகச் சென்று அதிரடி சோதனையில் காவல்துறையினா் ஈடுபட்டனா். அதிகாலை துவங்கிய சோதனையை 3 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தினா்.ஏற்கனவே இந்த மாதத்தில் இரண்டு முறை சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது கைப்பேசிகள், சிம் காா்டுகள், சாா்ஜா் ஒயா்கள், கஞ்சா உள்ளிட்டவை சிறைக் கைதிகளின் அறைக்குள் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT