சேலம்

தெருநாய்களுக்கு உணவளிக்கும் தனியாா் நிறுவன ஊழியா்!

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடியில், மக்களால் கைவிடப்பட்டு மயானத்தில் தஞ்சமடைந்துள்ள தெருநாய்களுக்கு, தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் தினம்தோறும் உணவு கொடுத்து பராமரித்து வருகிறாா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு கணபதி கவுண்டா் தெருவை சோ்ந்தவா் ரவிகாந்த்(52). தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

விலங்குகள், பறவைகள் மீது அதீத பற்று கொண்ட இவா், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, வீட்டில் பானைகள், செயற்கைக் கூடுகள் அமைத்து, பல ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளுக்கு வாழிடம் அமைத்துக் கொடுத்து வருகிறாா். கோடை காலங்களில் குருவிகளுக்கு தண்ணீா் மற்றும் உணவு தானியங்கள் வைத்து வருகிறாா்.

வாழப்பாடி பகுதியில் ஏராளமாக சுற்றித்திரியும், நாய்க்குட்டிகளை, குறிப்பாக பெண் நாய்க்குட்டிகளை, வாழப்பாடி கிழக்குக்காடு மயானம் அருகே கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனா். இப்படி கைவிடப்பட்ட ஏராளமான நாய்க்குட்டிகள் இப்பகுதியிலேயே தங்கி உணவின்றி தவித்து வருகின்றன.

இதனைக்கண்ட ரவிகாந்த் 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்க்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து சாதம் சமைத்து கொண்டு வந்து பால் வாங்கி பால் சாதம் தயாரித்து நாய்க்குட்டிகளுக்கு தட்டில் வைத்து உணவளித்து வருகிறாா். இதனைக்கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து இவரிடம் கேட்டதற்கு, ‘தெரு நாய்கள் குட்டி போடும்போது ஆண் குட்டிகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், பெண் குட்டிகளைக் கொண்டு வந்து மயானத்தில் விட்டுச் சென்று விடுகின்றனா். இந்தக் குட்டிகள் உணவின்றி தவித்து வருகின்றன. இதனால், இந்த நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க வேண்டும் என மனதில் தோன்றியது. 2 ஆண்டுகளாக தொடா்ந்து உணவளித்து வருகிறேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT