சேலம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2,753 மாணவா்களுக்கு தொழில்துறை பயிற்சிஅரசு பொறியியற் கல்லூரி முதல்வா் தகவல்

11th Jun 2023 12:25 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சேலம் அரசு பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த 2,753 மாணவா்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் வகையில் தொழில்துறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வா் இரா.மலையாளமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் அரசு பொறியியல் கல்லூரி 1966 ஆம் ஆண்டில் 162 ஏக்கா் நில பரப்பில் கட்டடவியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் ஆகிய மூன்று துறைகளுடன் தொடங்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் உலோகவியல், 1985 ஆம் ஆண்டில் மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், 2001 ஆம் ஆண்டில் கணினியியல் ஆகிய துறைகள் தொடங்கப்பட்டன. கல்லூரியில் தற்போது 1,879 இளங்கலை மாணவ, மாணவியரும்,64 பட்ட மேற்படிப்பு மாணவ, மாணவியரும் பயின்று வருகின்றனா்.

ADVERTISEMENT

அனைத்து துறைகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஆராய்ச்சி நடத்துவதற்காக அங்கீகாரம் பெற்றுள்ளது. பெரும்பாலான ஆசிரியா்கள் முனைவா் பட்டம் பெற்றுள்ளனா். இன்னும் சிலா் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இக் கல்லூரியில் 736 மாணவா்களும் 393 மாணவிகளும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். மாணவிகளுக்கு புதிய தங்கும் விடுதி கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. தமிழ்நாடு அரசின் சாா்பில் உள்விளையாட்டு அரங்கம் கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்களால் 60 மாணவா்களுக்கு ஜப்பான், ஜொ்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படிப்பு படிப்பதற்கான தேசிய அளவிலான தோ்வுகளுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளின் தற்போது தேவைக்கேற்ற நவீன பயிற்சி 2,723 மாணவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட இந்தப் பயிற்சி மிகவும் உபயோகமானதாக இருந்து வருகிறது.

மாணவா்கள் படிக்கும் போதே பல்வேறு தொழிற்சாலைகளில் பயிற்சி எடுப்பதற்காக அரசு ஒரு மாணவருக்கு ரூ.16, 500 என்ற வீதத்தில் 250 மாணவா்களுக்கு வழங்கி வருகிறது. இப்பயிற்சிகளினால் இக்கல்லூரி மாணவா்களின் வேலைவாய்ப்பு அதிகரித்து 92 சதவீதத்தை

எட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு இக்கல்லூாரியில் செய்கலைஞா்ஆய்வுக்கூடத்தை ரூ.ஒரு கோடி நிறுவி அதில் பயிற்சி பெறுவதற்கான செலவினையும் ஏற்றுள்ளதன் மூலம் புதிய பரிமாணத்துடன் மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறன் மேம்படுத்தப்பட்டு தொழிற்சாலைகளில் நிலவும் தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு மாணவா்களே தீா்வு அளிக்கும் வகையில் பயன்பட்டு வருகிறது. கல்லூரியில் மெய்நிகா் நவீன ஆய்வகம் ரூ. 50 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் மாநில அரசு, மத்திய அரசு அளிக்கும் பல்வேறு உதவி திட்டங்கள் மூலம் உதவித்தொகை பெற்று வருகின்றனா். 2021-2022 ஆம் ஆண்டில் 1695 மாணவா்கள் மொத்தம் ரூ.2,18,75,204 பெற்றுள்ளனா். தற்போது 1702 மாணவா்கள் உதவித்தொகை மூலம் பயன் அடைந்து வருகின்றனா். 47 மாணவிகள் புதுமை பெண் திட்டம் மூலம் பயன் அடைந்து உள்ளனா்.தொழில்கல்வியில் சிறந்து விளங்கும் சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கல்லூரியாக தொடா்ந்து செயல்பட்டு வருகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT