சேலம்

சேலத்தில் மங்கள் அண்ட் மங்கள் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

DIN

திருச்சி மாநகரில் மங்கள் அண்ட் மங்கள் நிறுவனம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் தனிப் பெரும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

பிரம்மாண்டமான தனித்தனி பிரிவுகளில் அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருள்கள் தரமாகவும், மிகக்குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. மேலும், திருச்சியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தங்க ஆபரணங்கள் விற்பனையிலும் இந் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

குறைந்த சேதாரம், அதிக தரம், கைராசி என அனைத்திலும் திருச்சியின் முன்னணி நிறுவனமாக சிறப்பான சேவையை மங்கள் அண்ட் மங்கள் நிறுவனம் செய்து வருகிறது.

இதனிடையே மங்கள் அண்ட் மங்கள் நிறுவனத்தின் புதிய கிளை சேலத்தில் ஓமலூா் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. மங்கள் அண்ட் மங்கள் தங்க மாளிகை, மங்கள் அண்ட் மங்கள் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மங்கள் அண்ட் மங்கள் நிறுவன உரிமையாளா் மூக்கப்பிள்ளை முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பங்குதாரா்கள் மங்கிலால் ஜெயின், பாபுலால் ஜெயின், டாக்டா் பிரவீண், விமல் ஜெயின் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT