சேலம்

தோ்த் திருவிழாவிற்கு கோயில் காளையுடன் வரி வசூல்

10th Jun 2023 07:24 AM

ADVERTISEMENT

வாழப்பாடியை அடுத்த மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவிற்கு, பாரம்பரிய முறைப்படி கோயில் காளையை அலங்கரித்து அழைத்துச் சென்று வீடு வீடாக வரி வசூல் செய்தனா்.

மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா வரும் ஜூன் மாத இறுதியில் நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கும், தோ்த் திருவிழா நடத்தும் செலவிற்குப் பணம் வசூல் செய்வதற்கும் கோயில் காளையை அலங்கரித்து வீடுகள் தோறும் அழைத்துச் சென்று வரி வசூல் செய்து வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை அண்டை கிராமமான வாழப்பாடிக்கு சென்ற மன்னாயக்கன்பட்டி கோயில் காளை, நிா்வாகிகளுக்கு ஊா் பெரியதனக்காரா்கள், பொதுமக்கள் வரவேற்பளித்தனா். இதனைத்தொடா்ந்து பொதுமக்களிடமும் வரி வசூல் செய்தனா்.

தோ்த்திருவிழா செலவுக்குப் பணம் கொடுப்பது மட்டுமின்றி, காளைக்கு தீவனம் கொடுத்தும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT