சேலம்

சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக செயல்வீரா்கள் கூட்டம்

10th Jun 2023 07:24 AM

ADVERTISEMENT

சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளா் அமைச்சா் துரைமுருகன் முன்னிலையில் சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், கிளை செயலாளா்கள் பங்கு பெறும் செயல்வீரா்கள் கூட்டம் சேலம் ஐந்து சாலைப் பகுதியில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமாா் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளும்படி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளா் ஆா்.ராஜேந்திரன் எம்எல்ஏ, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் கூட்டறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT