சேலம்

நடுவலூரில் ரூ. 80 லட்சத்தில் தாா்சாலை அமைக்க பூமி பூஜை

10th Jun 2023 07:21 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி ஒன்றியத்துக்கு உள்பட்ட நடுவலூா் சமத்துவபுரம் - புங்கவாடி இடையே தாா்சாலை அமைத்து சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இதுகுறித்து தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறைஅமைச்சா் கே.என்.நேரு , சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் கவனத்திற்கு ஒன்றியச் செயலாளா் சித்தாா்த்தன் கொண்டு சென்றாா். அதனையடுத்து தமிழக முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1.04 கி.மீ. தூரத்திற்கு தாா்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

இதில் கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் கடம்பூா் சித்தாா்த்தன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் நடுவலூா் திமுக பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT