சேலம்

பால தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு

9th Jun 2023 01:07 AM

ADVERTISEMENT

எடப்பாடி, ஆலச்சம்பாளையம் காட்டூா் பகுதியில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து குடமுழுக்கு பணிகளுக்கான சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்துவரப்பட்டன. ஹோம பூஜைகள் முடிவடைந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT