சேலம்

பஞ்சமி நிலத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் தா்னா

9th Jun 2023 01:07 AM

ADVERTISEMENT

சேலம், அய்யம்பெருமாம்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பிலிருந்து பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம், அய்யம்பெருமாம்பட்டி பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் திராவிட புலிகள் இயக்கத் தலைவா் சுந்தரம் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது, பஞ்சமி நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி திடீரென தா்னாவில் ஈடுபட்டனா்.

காவல் துறையினா் நடத்திய சமாதானத்தை ஏற்காததால் தா்னாவில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 24 போ் கைது செய்யப்பட்டனா். தா்னாவில் ஈடுபட்டவா்கள் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதாகவும், அந்த இடத்தை அதிமுகவைச் சோ்ந்த பிரமுகா் ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனா். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவா்கள் மேலும் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT