அம்மம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு டெஸ்லா நீா் அகாதெமி சாா்பில் பாடக் குறிப்பேடுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியா் செல்வம் அனைவரையும் வரவேற்றாா். டெஸ்லாவின் இயக்குநா்கள் ஆ.அருள்ராம்,பிரதீப், விஜய் டெஸ்லா, முதல்வா் மணிமாறன் ஆகியோா் பாடக் குறிப்பேடுகளை வழங்கினா். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் குமாரவடிவேல், நடராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆசிரியா்கள் ரவிக்குமாா், புனிதா, மனோரஞ்சிதம் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியா் ந.சித்ரா நன்றி கூறினாா்.