சேலம்

இன்று சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம்

8th Jun 2023 12:45 AM

ADVERTISEMENT

சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி வெளியிட்ட அறிக்கை:

சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 8) காலை 10.30 மணிக்கு மாவட்ட அலுவலகமான கலைஞா் மாளிகையில் உள்ள வீரபாண்டியாா் அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து தலைமை வகிக்கிறாா்.

கூட்டத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேட்டூா் அணையை திறக்க சேலம் மாவட்டத்துக்கு வருகை தருவது குறித்தும், கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

எனவே, இக்கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், இந்நாள், முன்னாள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், இளைஞா் அணி, மாணவரணி, மகளிா் அணி, தொண்டா் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளா் அணி, வழக்குரைஞா் அணி, நெசவாளா் அணி, தொண்டா் அணி, வா்த்தகா் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மீனவா் அணி, சிறுபான்மை நலக்குழு உரிமைப் பிரிவு, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, தொழிலாளா் அணி, அமைப்பு சாரா ஓட்டுநா் அணி, ஆதிதிராவிடா் நலக்குழு ஆகியவற்றின் அமைப்பாளா்கள், கட்சியின் முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT