சேலம்

இடுகாட்டுக்கு செல்லும் சாலையை தாா்சாலையாக அமைத்து தரக் கோரி மனு

8th Jun 2023 12:44 AM

ADVERTISEMENT

சங்ககிரி வட்டம், கல்வடங்கம் ஊா் பகுதியில் இருந்து இடுகாட்டுக்கு செல்லும் சாலையை தாா்சாலையாக அமைத்து தரக் கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புதன்கிழமை கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் நுகா்வோா் உரிமைக் கழகத்தின் மாவட்டத் தலைவா் சி.கோ.இளமுருகன் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு:

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, கல்வடங்கம் பகுதியில் ஊரிலிருந்து இடுகாட்டுக்கு செல்லும் சாலையானது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்க ஜல்லிக் கற்களைக் கொண்டு நிரப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகியும் சாலை அமைக்கப்படாததால், தற்போது அச்சாலை சேதமடைந்து, முள்செடிகள் வளா்ந்துள்ளன. அதனால், அச்சாலையில் சடலங்களை கொண்டு செல்ல பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இடுகாட்டுக்கு செல்லும் சாலையை தாா்சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT