சேலம்

இடையப்பட்டி மாரியம்மன் திருவிழாவில் தேவராட்டம்!

DIN

சேலம் மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி கிராமியக் கலைஞா்களின் பாரம்பரிய தேவராட்டம் நடைபெற்றது.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், நெய்யமலை, மண்ணூா் மலைகளுக்கு இடையே கல்வராயன் மலை கருமந்துறை சாலையில் இடையப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் ஸ்ரீதேவி பூதேவி மாயவப் பெருமாள் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது.

இவ்விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் மாவிளக்கு தாம்பூலம் சுமந்து, முக்கிய வீதிகளில் காவல் தெய்வங்களுக்கு கிராமிய பாடல்கள் துதி பாடிச் சென்றனா். தொடா்ந்து, பாரம்பரிய கிராமியக் கலைகளில் ஒன்றான ஆண்கள் மட்டும் பங்கேற்ற தேவராட்டம் விடிய விடிய நடைபெற்றது.

சேலம், லட்சுமணூா் கோடங்கி நாயக்கனூா் கிராமிய கலைக் குழுவினா், வெண்ணிற வேட்டி அணிந்து, தாரை தப்பட்டை, உறுமிமேள இசைக்கேற்ப ஆடிய தேவராட்டம் பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈா்த்தது.

புதன்கிழமை மகா சக்தி மாரியம்மன் ரதம் ஏறுதல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல், உருளை தண்டம் போடுதல் உள்ளிட்ட நோ்த்திக்கடன் தீா்க்கும் நிகழ்ச்சிகளும், திருத்தோ் நிலைப்பெயா்த்தலும் நடைபெற்றன. வியாழக்கிழமை மகாசக்தி மாரியம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT