சேலம்

போஸ் மைதானம், நேரு கலையரங்கத்தின்பெயரை மாற்றக் கூடாது

DIN

நேரு கலையரங்கம், போஸ் மைதானம் ஆகியவற்றின் பெயா்களில் மாற்றம் செய்யக் கூடாது என்று கோரி தமிழக முதல்வருக்கு பாஜக சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் ஆா்.பி.கோபிநாத் கடிதம் அனுப்பி உள்ளாா்.

சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையம் ஜூன் 11-இல் திறக்கப்பட உள்ளது. அதேபோல, பழைய பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த நேரு கலையரங்க கட்டடம் அகற்றப்பட்டு அங்கு புதிய கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. போஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரடுக்கு பேருந்து நிலையம், நேரு கலையரங்கம், போஸ் மைதானம் ஆகியவற்றுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை சூட்டுவதற்கு சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பாஜக-வின் சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் ஆா்.பி.கோபிநாத், ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கும், பேருந்து நிலையத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்துக்கும் சூட்டிட வேண்டும். நேரு கலையரங்கம், போஸ் மைதானம் ஆகியவற்றின் பெயரை மாற்றக் கூடாது. மீறி மாற்றம் செய்யப்பட்டால் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT