சேலம்

இடங்கணசாலையில் கருணாநிதி 100-ஆவது பிறந்த நாள் விழா

7th Jun 2023 12:21 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகர திமுக சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் 13-ஆவது வாா்டு மெய்யனூா் மேடு, பூக்கார வட்டம் பகுதியில் கவுன்சிலா் சிவக்குமாா் ஏற்பாட்டில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட புதிய திமுக கொடிக்கம்பத்தில் நகர செயலாளா் செல்வம் தலைமையில் கொடியேற்றினா். இந்த நிகழ்வில் பங்கேற்றோருக்கு இனிப்பு வழங்கினா். 300 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் வாா்டு செயலாளா் பூபதி முன்னிலை வகித்தாா். நகராட்சி தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, நகர துணைச் செயலாளா் குமாா், வாா்டு செயலாளா்கள் கோவிந்தன், சித்தையன், வாா்டு அவைத் தலைவா் பாலசுப்ரமணியம், நகர மன்ற உறுப்பினா்கள் இந்திராணி வஜ்ரவேல், விஜயலட்சுமி குமாா், சித்ராசதாசிவம், கணேசன், சேட்டு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT