சேலம்

சங்ககிரியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா

6th Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி தண்ணீா்தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா சங்ககிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளைத்தலைவா் கே.சண்முகம், பசுமை சங்ககிரி அமைப்பின் தலைவா் மரம்பழனிசாமி ஆகியோா் தலைமை வகித்து நெகிழிகளை தவிா்ப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து பேசினா். இதனையடுத்து சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்புறத்தில் உள்ள நல்ல கிணறு வளாகத்தில் நாவல், நாகலிங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஐந்து மரக்கன்றுகளை நிா்வாகிகள் நட்டு வைத்தனா் (படம்). தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை நிா்வாகிகள் செந்தில்குமாா், கிருஷ்ணமூா்த்தி, கிஷோா்பாபு, சதீஷ் குமாா், பசுமை சங்ககிரி அமைப்பின் நிா்வாகிகள் சீனிவாசன், கனகராஜ், காந்தி, சுந்தா் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT