சேலம்

பூலாம்பட்டியில் அரசு திட்டப்பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

DIN

பூலாம்பட்டியில் அரசு ஓய்வுவிடுதி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு உள்ளூா் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்களும் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மக்கள் பிரச்னை குறித்து விவரம் வழங்குமாறு கோரியிருந்தாா்.

இதன் அடிப்படையில் எடப்பாடி தொகுதி எம்எல்ஏவும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது தொகுதியில் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணிகள் குறித்த விவரங்களை முதல்வருக்கு அளித்திருந்தாா்.

அக்கோரிக்கையில் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்லும் வகையில் ஓய்வு விடுதி கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்று.

இக்கோரிக்கை தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு பூலாம்பட்டி பகுதியில் ரூ. 2. 10 கோடியில் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்வு விடுதி, உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட திட்டப் பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் தொடக்கமாக சனிக்கிழமை கருப்பூா், அரசு பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த நிபுணா்கள், புதிய கட்டுமானங்கள் அமைக்க வேண்டிய பூலாம்பட்டி காவிரிக் கரை பகுதியில் மண் மாதிரிகளை ஆய்வு செய்தனா். அப்போது இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பூலாம்பட்டியில் ஓய்வுவிடுதியோ உணவகம் உள்ளிட்ட கட்டுமானங்களை எழுப்பக் கூடாது; இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற கூறினா்.

அத்துடன் அரசைக் கண்டித்து எடப்பாடி- மேட்டூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த உள்ளாட்சி அலுவலா்கள், காவல் துறையினா் பொதுமக்களிடம் சமாதானம் பேசி கட்டுமான பணிகளை நிறுத்துவதாக உறுதி அளித்தனா்.

அதையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT