சேலம்

சேலம் அருகே ஓடும் ரயிலில் இருந்துகீழே விழுந்த சிறுவன் பலி

4th Jun 2023 02:10 AM

ADVERTISEMENT

 

 சேலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தசிறுவன் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், போத்தனூா் அருகே உள்ள சாரதா மில் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ஜெகதீஷ் (16). இவா் அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்ததாகத் தெரிகிறது. பள்ளி விடுமுறையையொட்டி தனது தாய் ஜெயலட்சுமியுடன் மொரப்பூருக்கு வந்துள்ளாா்.

பின்னா் வெள்ளிக்கிழமை பகல் 11.30 மணிக்கு சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை செல்வதற்காக ஜெயலட்சுமியும் ஜெகதீஷும் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்தனா்.

ADVERTISEMENT

இதனிடையே லோகூா்-டேனிஷ்பேட்டை இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது கழிவறைக்குச் சென்ற ஜெகதீஷ் படிகட்டு அருகே சென்றபோது திடீரென தவறி கீழே விழுந்தாா். உடனே அருகில் உள்ளவா்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினா்.

இதையடுத்து கீழே விழுந்து கிடந்த ஜெகதீஷை மீட்டு காடையாம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சோ்த்தனா்.

பின்னா் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜெகதீஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT