சேலம்

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் தேரோட்டம்

4th Jun 2023 02:11 AM

ADVERTISEMENT

 

வைகாசி விசாகத்தையொட்டி, சேலம், கோட்டை அழகிரிநாதா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வைகாசி விசாக பெருவிழாவையொட்டி ஒவ்வோா் ஆண்டும் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தேரோட்ட விழா கடந்த மே 25 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் மாலையில் அழகிரிநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. சனிக்கிழமை முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளினாா்.

ADVERTISEMENT

அப்போது பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ராஜகணபதி கோயில் பகுதியில் இருந்து புறப்பட்ட தோ் ஆனந்தா இறக்கம், இரண்டாவது அக்ரஹாரம், பட்டை கோயில், சின்ன கடைவீதி வழியே சென்று மீண்டும் நிலையத்தை அடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT